இன்று காலை 8 மணியளவில் ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மற்றுமொரு தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் கினிகத்தேனை- தியகல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

THAMILLANKA.COM