கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மராடு பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.

இதன்படி, இந்த கட்டிடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. அதன்படி நேற்று காலை 11 மணியளவில் அடுத்தடுத்து 2 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

சில நிமடங்களில் இடிந்து விழுந்த அந்தக் கட்டிடங்கள் மிகப் பெரிய அளவில் புகையை வெளியிட்டன. இந்தநிலையில், இன்று காலை 11 மணியளவில் 2 கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. இந்த இரண்டு கட்டிடங்களும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு ஏதும் சேதம் ஏற்படுத்தாமல் இடிக்கப்பட்டன. இந்த நாள்களில் மட்டும் 4 உயரமான கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

thamillanka.com