bowler misra interview

பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, தான் நீண்ட நாட்களாக இந்திய அணியில் ஏன் இடம் பெறவில்லை என்பது குறித்து மனம் உருகி பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக ஆடி வரும் அமித் மிஸ்ரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது நீண்ட நாட்களாக இந்திய அணியில் ஏன் இடம் பெறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தனக்கு ஏன் இப்படி நடந்தது  என்பதை நான் நீண்ட நாட்களாக என்னிடமே கேட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

37 வயதாகும் அமித் மிஸ்ரா வலது கை லெக் ஸ்பின்னர் ஆவார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் விளையாடியபோது காயம் காரணமாக வெளியேறிய இவர், அதன் பின்னர் காயத்தில் இருந்து திரும்பிய போதும், ஐ.பி.எல் மற்றும்  ரஞ்சி போட்டிகளில் போட்டிகளில்தான் விளையாடி வருகிறார். 

இது குறித்து பேசிய அவர், 

இந்திய அணியில் ஒருவர் காயம் காரணமாக வெளியேறினால் அவர் மீண்டும் அணியில் இடம்பெற வேண்டும் என்ற விதியுள்ளது. கடைசியாக காயம் காரணமாக வெளியேறிய விக்கெட் கீப்பர் விரிதிமான் சாகா ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அணிக்கு அழைக்கப்பட்டார், ஆனால் அது போன்ற அழைப்புகள் அணி தேர்வர்களிடம் இருந்து எனக்கு ஏன் வரவில்லை என்பது தெரியவில்லை.. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

எனது கடைசி ஆசை: 

தான் இந்திய அணிக்காக அனைத்து கடினமான தருணங்களிலும் விளையாடியுள்ளதாக தெரிவித்துள்ள அமித் மிஸ்ரா, தனது கடைசி ஆசை, சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக ஒரு முறை விளையாட வேண்டும் என்பதுதான் என உருக்கமாக பதிலளித்துள்ளார்.