இலங்கை மற்றும் மேற்கிற்திய தீவுகளுக்கிடையான இரண்டாவது டி-20 போட்டி நேற்று பல்லேகேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாட களமிறங்கியது.

இதன்படி முதலில் துடுபெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ஓட்டங்களை குவித்தது அணி சார்பில் அதிகபட்ச்ச ஓட்டமாக தாசுன் ஷானகா 31 ஓட்டங்களைக் குவித்தர்.

156 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது. அணி சார்பாக அதிகபட்ச்ச ஓட்டமாக பிராண்டன் கிங் மற்றும் ஷிம்ரான் ஹெட்மியர் தலா 43 ஓட்டங்களைக் குவித்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட இத் தொடரில் 2-0 என்ற கண்கில் டி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியுள்ளது.

thamillanka.com