Undertaker The Last Raid is out tomorrow

உலகம் முழுவதும் மிக பிரபலமான சண்டை நிகழ்ச்சி WWE.தற்போது செல்போன்களில் பப்ஜி விளையாடி வரும் குழந்தைகளுக்கு wwE என்பது சற்று மெய் சிலிர்க்க வைக்கலாம்.

ஏனென்றால் 90’s கிட்ஸ்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியாகும். இதில் கோல்ட் பர்க், பிக் சோ, பட்டிஸ்டா, ட்ரிபிள் எச், ஸ்டீவ் ஆஸ்டின் என பல்வேறு வீரர்களுக்கும் தனித்தனியே ரசிகர்கள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்தமான ஒருவர் என்றால் அது ‘தி அண்டர் டேக்கர் தான்’ 

இடி மின்னலுடன் ஒரு வருகை, கையசைத்தால் தீப்பிடிக்கும் அரங்கம், சவப்பெட்டிக்குள் அடிக்கடி சென்று வருவது என குழந்தைகளுக்கு திகிலூட்டும் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அண்டர் டேக்கர்.

55 வயதாகும் அண்டர் டேக்கரின் உண்மையான பெயர் மார்க் கேளவே. இவரின் கடைசி போட்டியாக கடந்த 2018  ரோமன் ரெய்ன்ஸுடன் மோதினார்.

அதில் அவர் தோல்வியடைந்ததை விட, இனி போட்டியில் பங்கேற்கமாட்டார் என்பதுதான் ரசிகர்களின் கவலையாக இருந்தது.

இந்நிலையில் அவரின் வாழ்கை குறித்த ஆவணப்படம் ஒன்று இன்று வெளியாகிறது.

அண்டர் டேக்கர் தி லாஸ்ட் ரெய்ட் என்ற அந்த ஆவணப்படம் கடந்த 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது. அதில் அண்டர்டேக்கர் யார், அவரின் வாழ்கை என்ன என்பது குறித்த அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேடையில் நாம் பார்க்காத அண்டர்டேக்கரின் பல்வேறு காட்சிகள் இடம்பெறவிருக்கிறது.

இதற்கான முன்னோட்டம் கடந்த மே 5ம் தேதி வெளியானது.

அதில் பேசியிருந்த அண்டர் டேக்கர், இந்த அவணப்படத்தில் அண்டர் டேக்கருக்கும் மார்க் காலவேவிற்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் அறிவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் ஆவணப்படம் தனது வாழ்வின் முக்கிய தருணங்களை மிக ஒன்றியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அண்டர் டேக்கர் தி லாஸ்ட் ரெய்ட் நாளை (10.05.2020) WWE அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியாகிறது.