2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது.

அதில் 2வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, மூத்த வீரர் எம்.எஸ்.தோனி களமிறங்கி விளையாடினார். அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போது  தோனி ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்தடுத்து வந்தவர்களும் விக்கெட்களை இழந்ததால் இந்திய அணி  உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

அந்த ரன் அவுட் குறித்து தோனி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,  தமது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனது குறித்து தோனி மனம் திறந்துள்ளார்.

அந்த போட்டியில் நான் ஏன் போட்டியை சமன் செய்யவில்லை என்று எப்போதும் யோசித்து கொண்டே இருப்பதாக தோனி கூறினார்.

thamillanka.com