கமலுக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்தவகையில் கமலஹாசன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த தலைவன் இருக்கின்றான் படம் தூசி தட்டி எடுக்கப் படுகிறது.

இந்த படத்தின் கதை தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஒத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது. அந்த தலைப்புக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் வந்ததால் அந்தப் படத்தை அரசியலுக்கு ஏற்றபடி தலைவன் இருக்கின்றான் என மாற்றிக் கொண்டாராம்.

தெனாலி படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் ஏ ஆர் ரகுமான் கமல் படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்திலும் கமலஹாசனுக்கு மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.

தேவர் மகன் படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்த ரேவதி ஒரு கதாபாத்திரத்திலும், கமலின் சமீபத்திய வரவுகளான ஆண்ட்ரியா மற்றும் பூஜாகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக கமலின் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.