கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர். நானும் விரும்புகின்றேன் .

தேர்தல் நடைபெறுகின்ற நேரத்திலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் மீண்டும் கூட்டி ஒரு நல்ல முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றதென தெரிய வருகின்றது.

அதேபோல ஜனாதிபதி விரும்பினால் மேலுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு இடமிருக்கிறது.

எனவே ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தலோசித்து கொரோனா நோயிலிருந்து எமது மக்களை எவ்வாறு காப்பதென்று முடிவெடுக்க முன்வரவேண்டும்.

எமது நாட்டில் இதுவரையில் 10 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரையி ல், எனக்கு கிடைத்த தகவலின் படி 32 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர், 82 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

இத்தாலியில் 1300 பேர் பலியாகியுள்ளனர், 18000 க்கு மேற்பட்டோர் பாதிப்டைந்துள்ளனர்.
ஈரானில் இதுவரை 600 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 11000 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

பிரான்சில் 90 பேர் பலியாகியுள்ளனர் 1000 பேர் பாதிப்படைந்துள்ளனர் , ஸ்பெயினில் 140 பேர் பலியாகியுள்ளனர் , 3000 க்கு மேல் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நோய் அமெரிக்க, கனடா போன்ற வடஅமெரிக்க நாடுகளிலும், மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகின்றது.

ஆசிய கண்டத்திலுள்ள தென்கொரியா, ஜப்பான் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு குடியரசு போன்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமடைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் 13600 பேருக்கு மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர் என தெரியவருகின்றது.


எனவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நோயை தடுக்க முன்வரவேண்டும்.

மேலும், எமது அண்டைய நாடான இந்தியாவில் இருவர் இந்த நோயால் பலியாகியுள்ளனர். மற்றும் 100 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

ஆகவே , மக்கள் இந்த நோயிலிருந்து தப்ப வேண்டுமாயின் மிருகம், மீன் மற்றும் பறவை போன்ற இறைச்சியை உடனடியாக நிறுத்திவிட்டு மரக்கறி வகைகளை உண்பதால் இந்த கொடிய நோயிலிருந்து தப்பலாம் என தெரியவருகின்றது.

அதை நான் தீவிரமாக சிபாரிசு செய்கின்றேன்.

நாட்டில் முன்னர் அவசரகால சட்டம் அமுலில் இருந்த காலங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதை தடை செய்திருந்தார்கள்.

அதே போலவே இன்றைய காலகட்டத்திலும் பொது இடங்களில் மக்கள் கூடிகுலாவ முன்வரக்கூடாது. வீட்டினுள்ளேயே இருப்பது மிகவும் சாலச் சிறந்தது.

நாட்டுமக்கள் அனைவரும் இந்த நோய் அரக்கனிலிருந்து விதிவிலக்கு பெறுவதுக்கு நான் எல்லாம் வல்ல சிவனை வணங்குகின்றேன்.

thamillanka.com