India,08,Janauray (Thamillanka.lk)

‘ஜனநாயக நாட்டில், தேர்தல் என்பது கேலிக்கூத்தாக மாறி இருக்கிறது’ என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறியுள்ளார்.’கஜா’ புயல் நிவாரணத்தை காரணம் காட்டி, திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. புயலின் பாதிப்பு குறித்து, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே தெரியும். அப்படி இருக்கும் போது, தேர்தலை அறிவிக்கும் போதே, தமிழக அரசுடன் கலந்து பேசி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த பாதிப்பின் நிலையை அறியாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் எனக் கேட்கவில்லை. ஜனநாயக நாட்டில், தேர்தல் என்பது கேலிக்கூத்தாக மாறி இருக்கிறது, என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


மேலும் அ.ம.மு.க., துணைப் பொதுச் செயலர் தினகரன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் நடைமுறைகள் துவங்கிய பின், கருத்து கேட்பு என்ற பெயரில், ஒரு நாடகத்தை நடத்தி, தேர்தல் கமிஷன், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. இது, ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கி உள்ளது. இந்த ஜனநாயக விரோத செயலை, அ.தி.மு.க.,விற்கு சாதகமாக செய்ய முயன்றபோதே, கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.,வும், இதற்கு துணை போனது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.,வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே, இது காட்டியது , என்று அவர் கூறியுள்ளார்.

http://www.thamillanka.lk