இந்தியாவின் தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 448 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் புதிதாக 668 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, அவர்களில் 87 போ் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை மூவாயிரத்து 303 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 886 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.